Monday, 22 September 2025

எல்லையில்லாத பாதை

 எல்லையில்லாத    பாதை


 இன்னும் எத்தனை 

நாள்தான்

காத்திருப்பது

அப்படியொன்றும்

கிடைக்காத   ஒன்றல்ல

தேடிப்போகவேண்டியதில்லை

அரிதான சமயங்களில் 

தானாகவே  வந்துவிடும் 

ஆனாலும் காத்திருப்பு 

தொடர்கிறது

இரவு நேர  மழைத்துளியின் குளிர்மை

குழந்தை கடித்துத்தருகிற எச்சில் மாம்பழ இனிப்பு 

என

ஏதோ  ஒரு சுவையில் 

எங்கோ காத்திருக்கின்ற 

அந்த மரணத்திற்கு

No comments:

Post a Comment