எல்லையில்லாத பாதை
இன்னும் எத்தனை
நாள்தான்
காத்திருப்பது
அப்படியொன்றும்
கிடைக்காத ஒன்றல்ல
தேடிப்போகவேண்டியதில்லை
அரிதான சமயங்களில்
தானாகவே வந்துவிடும்
ஆனாலும் காத்திருப்பு
தொடர்கிறது
இரவு நேர மழைத்துளியின் குளிர்மை
குழந்தை கடித்துத்தருகிற எச்சில் மாம்பழ இனிப்பு
என
ஏதோ ஒரு சுவையில்
எங்கோ காத்திருக்கின்ற
அந்த மரணத்திற்கு