மனைவியின் சுடிதார்
காற்றில் பறக்கையில் ....
குழந்தை கையை நீட்டும்போது
ஓரத்தில் மாட்டப்பட்டுள்ள
சுமைதாங்காத புத்தகப்பையை
பகலிலும்
அணைக்கமறந்து விடும்போது
சைடு ஸ்டான்டுடன்
புறப்பட்டுவிடும்போது
என
ஒவ்வொன்றின்போதும்
யாரோ ஒருவர்
தனது வேகத்தை
நிதானமாக்கி
நினைவூட்டுகின்றனர் .
சற்றுநேரம்களித்தே
உணர முடிகிறது .
வீசிச்சென்ற பேரன்பை .
No comments:
Post a Comment